சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மானாமதுரை ஒன்றியம் செய்களத்தூர் ஊராட்சியில் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியையெட்டி கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இந்த கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணை தலைவர் திருமதி ஜானகி சுப்ரமணியன் அவர்கள் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணை தலைவர் திரு மகேந்திரன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். மேலும் இதில் சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி ரவிக்குமார் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் துரை. ராஜாமணி, மானாமதுரை ஒன்றிய பெருந்தலைவர் திருமதி லதா அண்ணாதுரை, ஒன்றிய துணைப் பெருந்தலைவர் முத்துச்சாமி, ஒன்றிய கவுன்சிலர் மலைச்சாமி, பாலகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மருத்துவ அலுவலர்கள், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், வேளாண்மை துறை அலுவலர்கள், மின்சார வாரிய துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் லிவிங்ஸ்டன்
No comments:
Post a Comment