சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மதுரை - இராமேஸ்வரம் பைபாஸ் தேசிய நெடுஞ்சாலையில் 61 வது தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன் செல்லும் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு சிவகங்கை மாவட்ட திமுக சார்பாக மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே. ஆர். பெரியகருப்பன் அவர்களின் தலைமையில் சால்வை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நகர் மன்ற தலைவர் திரு எஸ். மாரியப்பன் கென்னடி, நகர் மன்ற துணை தலைவர் பாலசுந்தர், நகர் கழக செயலாளர் பொன்னுசாமி, ஒன்றிய பெருந்தலைவர் லதா அண்ணாதுரை, சிவகங்கை மாவட்ட ஒன்றிய நகர பேரூர் திமுக கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
- செய்தியாளர் லிவிங்ஸ்டன்
No comments:
Post a Comment