சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் இன்று தேசிய ஒருமைப்பாட்டு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திய அரசியல் ஒற்றுமைக்காக பாடுபட்ட சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் பிறந்த நாளான அக்டோபர் 31 தேசிய ஒருமைப்பாட்டு தினமாக நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.
காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி தலைமை வகித்து தேசிய ஒருமைப்பாட்டு தின உறுதி மொழியை வாசித்தார். இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் பேராசிரியர்களும் ஆசிரியரல்லா பணியாளர்களும், மாணவ மாணவிகளும் கலந்துகொண்டு தேசத்தின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே நான் உவந்தளிப்பேன் என்றும், சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் தொலைநோக்குப் பார்வையாலும், நடவடிக்கையாலும் சாத்தியமாக்கப்பட்ட இந்த ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வை பேணிப்பாதுகாப்பேன் என்றும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
No comments:
Post a Comment