சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர், மலேஷியா லோட்டஸ் குழும வள்ளல் ரெங்கசாமி பிள்ளை அவர்களின் கொள்ளுப்பேத்தியும், காரைக்குடிஅழகப்பா அரசு கலைக் கல்லூரியின் முன்னாள் புவி அமைப்பியல் துறைப் பேராசிரியர் நாகராஜன் - சந்திரகாந்தி அவர்களின் பேத்தியும், ரத்னக்குமார்-கீதா அவர்களின் மகளுமான செல்வி தேவப்பிரியா ரத்னக்குமார் சீனாவில் நடைபெற்ற 19ஆவது ஆசிய ரோலர் ஸ்கேட்டிங் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பாக விளையாடி வெண்கலப் பதக்கம் பெற்றுத் தந்துள்ளார்.
பல்வேறு நாடுகளைச் சார்ந்த அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் தங்கப் பதக்கத்தை ஜப்பானும், வெள்ளிப் பதக்கத்தை ஆஸ்திரேலியாவும், வெண்கலப் பதக்கத்தை இந்தியாவும் பெற்றன. பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா விடுதலை ஹீரா, ரேஷ்மா, ஜெயஸ்ரீ மற்றும் யோகிதா ஆகிய ஐந்து மாணவிகளையும் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பதக்கம் வென்ற தேவப்பிரியா உள்ளிட்ட வீராங்கனைகள் மதுரை அலெக்ஸ் ஸ்கேட்டிங் அகடமியில் பயிற்சி பெற்றுள்ளனர்.
மதுரை வேளாண் கல்லூரியில் படித்து வரும் தேவப்பிரியாவை முக்கியப் பிரமுகர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். செய்தியாளர் முத்துராஜன்
No comments:
Post a Comment