சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியம் மடப்புரம் ஊராட்சியில் "கால்நடை மருத்துவ முகாமினை" மாண்புமிகு முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ. தமிழரசி ரவிக்குமார் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். அதேபோல் திருப்புவனம் பேரூராட்சி வார்டு எண் 1 மன்னர் குடியிறுப்பு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் அரசு மேல்நிலைப்பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டிடத்தையும் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் திறந்து வைத்தார்.
பின்னர் திருப்புவனம் ஒன்றியம் அல்லிநகரம் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளையும் சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.
இந்நிகழ்வில் திருப்புவனம் பேரூராட்சி மன்ற தலைவர் சேங்கைமாறன், திருமதி வசந்தி சேங்கைமாறன், எம்.ஏ.கடம்பசாமி, பேரூராட்சி துணைத் தலைவர் ரஹ்மத்துல்லாகான், சுப்பையா, ஈஸ்வரன், தேவதாஸ், இளங்கோவன், மகேந்திரன், காளீஸ்வரன், பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் கண்ணன், பாலகிருஷ்ணன், திருமதி சித்ரா முருகன், திருமதி செல்வராணி அய்யப்பன், திருமதி அழகு பிள்ளை, நயினார் பேட்டை பிச்சை, ஏனாதி பொன்னழகு, விவசாய அணி துணை தலைவர் டி. ஆர். சேகர், ஊராட்சி மன்ற தலைவர் திருமதி சபர்மதி கோபி, தேளி கோபால் து. பிச்சை, ஊராட்சி மன்ற தலைவர் திருமதி இந்திரா காந்தி சூரப்பிரகாஷ், வட்டாட்சியர் கண்ணன், அரசு கால்நடை துறை அதிகாரிகள், மருத்துவ அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் லிவிங்ஸ்டன்
No comments:
Post a Comment