மானாமதுரை அருள்மிகு தியாகவிநோத பெருமாள் திருக்கோவில் புதிய அறங்காவலர்கள் நியமனம். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 7 October 2023

மானாமதுரை அருள்மிகு தியாகவிநோத பெருமாள் திருக்கோவில் புதிய அறங்காவலர்கள் நியமனம்.


சிவகங்கை மாவட்டம் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் திரு வே. செல்வராஜ் அவர்கள் பிறப்பித்த ஆணை உத்தரவுப்படி ,மானாமதுரை வட்டம் மற்றும் நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு தியாகவிநோத பெருமாள் திருக்கோவிலுக்கான புதிய அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 22.9.23 அன்று சிவகங்கை மாவட்ட குழுவின் பரிந்துரைக்கப்பட்ட தீர்மான எண் 184ன் படி, மானாமதுரை நகர் பகுதியை சேர்ந்த திரு ரா. கார்த்திக், மதுரை திருப்பாலையில் உள்ள சிவா நகரைச் சேர்ந்த திருமதி க. ராமலட்சுமி மற்றும் மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த திரு மு. சங்கிலி ஆகிய மூன்று நபர்கள் கோவிலின் புதிய அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

எனவே இவர்கள் மூவரும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும் தொடர்ச்சியாக கோவிலில் நிர்வாக ரீதியாக அறங்காவலர்களாக செயல்படுவார்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்போதுள்ள அறங்காவலர்கள் அறநிலையத்தின் பொறுப்பையும் அதன் சொத்துக்களையும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அறங்காவலர்களிடம் உடனடியாக ஒப்படைத்து விட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அறங்காவலர்கள் உடனடியாக பொறுப்பேற்று அறிக்கை அளிக்கவும், சட்ட விதிகளுக்கு உட்பட்டு அறநிலைய காரியங்களை செய்து உரிய காலத்தில் அறிக்கை சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப் படுவதாகவும் இந்து சமய அறநிலையத்துறை ஆணை உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


இந்நிலையில் புதிய அறங்காவலர்களாக பொருப்பேற்க தேர்வாகியுள்ள நபர்களை கௌரவிக்கும் விதமாக மானாமதுரை நகர் கழக செயலாளர் திரு க. பொன்னுசாமி அவர்களின் தலைமையில் நியமன ஆணைகளை வழங்கி, சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கிழக்கு ஒன்றிய செயலாளர் துரை. ராஜாமணி, திரு ஏ. ஆர். ஜெயமூர்த்தி கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு வாழ்ந்து தெரிவித்தனர்.


- செய்தியாளர் லிவிங்ஸ்டன் 

No comments:

Post a Comment

Post Top Ad