சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் விலங்கியல் மன்றத் துவக்க விழா மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழா இன்று நடைபெற்றது. கல்லூரியில் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் பொறுப்பு முதல்வர் முனைவர் துரை தலைமை வகித்தார். மூன்றாம் ஆண்டு மாணவி ரசிகா வரவேற்புரை ஆற்றினார்.
விலங்கியல் துறைத் தலைவர் முனைவர் போதகுரு அறிமுக உரை ஆற்றினார்.தமிழ்த் துறைத் தலைவர் முருகேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தமிழ் இலக்கியம் காட்டும் லட்சியப் பாதை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றி இலக்கியத்திற்கும் தற்போதைய காலத்திற்கும் உள்ள தொடர்பை எடுத்துக்காட்டி மாணவர்கள் தங்கள் வாழ்வில் எவ்வாறு வெற்றி பெற வேண்டும் என்று கூறினார். இரண்டாம் ஆண்டு மாணவி சுகன்யா நன்றி கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை விலங்கியல் மன்ற பொறுப்பாசிரியர் முனைவர் சங்கர் பெருமாள் செய்திருந்தார். இதில் விலங்கியல் துறை இணைப் பேராசிரியர் சோமசுந்தரம் மற்றும் விரிவுரையாளர்கள் பஸ்ரின் பீவி, கண்ணாமணி, இந்துமதி, மணிமுத்து, ஜெயந்தி, செல்வி, சோலச்சி மற்றும் மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment