தாய் தமிழர் கட்சியினர் மானாமதுரை ரயில் நிலைய முற்றுகை போராட்டம்.. போலீசார் கைது நடவடிக்கை. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 4 October 2023

தாய் தமிழர் கட்சியினர் மானாமதுரை ரயில் நிலைய முற்றுகை போராட்டம்.. போலீசார் கைது நடவடிக்கை.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தாய் தமிழர் கட்சி சார்பாக ரயில் சந்திப்பு நிலைய முற்றுகைப் போராட்டம் இன்று புதன்கிழமை காலை சுமார் 11.30 மணியளவில் மானாமதுரை ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா அரசையும், அதற்கு துணை போகும் ஒன்றிய அரசையும், கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை கடுமையாக கண்டித்தும் நடைபெற்றது. இந்த ரயில் நிலைய முற்றுகை போராட்டமானது தாய் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளர் திரு ச. அ. செல்வம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 


இப்போராட்டத்தில் தாய் தமிழர் கட்சியின் தலைவர் திரு பீ. ம. பாண்டியன் அவர்கள் முன்னிலை வகித்து கண்டன பேருரையாற்றினார். மேலும் இதில் பங்கேற்ற தாய் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் கையில் கட்சி கொடியை ஏந்தி கர்நாடகா அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பியும், தமிழக விவசாயிகள் பயன்பெறும் வகையில் தண்ணீர் திறந்துவிட தங்கள் கோரிக்கைகளை முன்மொழிந்து வலியுறுத்தி பேரணியாக சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதனைத் தொடர்ந்து காவல்துறை சார்பாக பலத்த பாதுகாப்பு அழிக்கப்பட்டது. சிறிது நேரத்திற்கு பின் நிலைமை கட்டுக்கடங்காமல் செல்வதை அரிந்த போலீஸார் அவர்களை கைது செய்து அங்கிருந்து வெளியேற்றி அருகில் உள்ள மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பான சூழல் நிலவியது.


- செய்தியாளர் லிவிங்ஸ்டன் 

No comments:

Post a Comment

Post Top Ad