ஊர்வலத்திற்கு காரைக்குடி துணைக் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமை தாங்கினார். அழகப்பா அரசு கலைக்கல்லூரி முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி வழிகாட்டுதலில் கல்லூரியின் பொறுப்பு முதல்வர் முனைவர் துரை முன்னிலை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, நகர் மன்றத் தலைவர் முத்துத் துரை ஆகியோர் கொடி அசைத்துப் பேரணியைத் துவக்கி வைத்தனர். நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் சந்திரசேகரன், உதவிக் கோட்டப் பொறியாளர் அரிமுகந்தன், உதவிப்பொறியாளர் பூமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அழகப்பா அரசு கலைக்கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் முருகேசன், வரலாற்றுத் துறைத் தலைவர் முனைவர் நிலோஃபர் பேகம், முனைவர் லதா ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சாலைப் பாதுகாப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி முழக்கமிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் சுந்தரி, முனைவர் தெய்வமணி, முனைவர் லெட்சுமண குமார், முனைவர் சித்ரா ஆகியோர் மாணவ, மாணவிகளை வழிநடத்தினர்.
No comments:
Post a Comment