சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ரோட்டரி பியர்ல் சங்கமம் நடத்திய இலவச மருத்துவ முகாம் காரைக்குடி முத்துப்பட்டணத்தில் உள்ள வித்யாகிரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இதில் அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்த கொண்டு மருத்துவ முகாமுக்கு வந்த மக்களுக்கு சேவை செய்தனர்.
இம் மருத்துவ முகாமை காரைக்குடி நகர்மன்றத் தலைவர் முத்துத்துரை துவங்கி வைத்தார் . ரோட்டரி சங்கத்தின் முன்னாள் ஆளுநர் பெரியண்ணன் தலைமை உரை ஆற்றினார். மேலும் இம் முகாமில் வித்யா கிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் சுவாமிநாதன், தேவகோட்டை ரோட்டரி சங்க நிர்வாகி ஆண்டனி சேவியர், மருத்துவர் பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவப் பரிசோதனை செய்ததோடு இலவச மருந்துகளையும் பெற்றனர்.
No comments:
Post a Comment