இருளில் தத்தளித்த மானாமதுரை காவல் நிலையம்.. செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளரிடம் அத்துமீறிய காவலர். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 3 October 2023

இருளில் தத்தளித்த மானாமதுரை காவல் நிலையம்.. செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளரிடம் அத்துமீறிய காவலர்.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர் காவல்நிலையத்தில் நாள்தோறும் பல்வேறு குறைகளுக்கு தீர்வு காண ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் மானாமதுரை பகுதியில் சமீப காலமாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் திங்கட்கிழமை இரவு மானாமதுரை பகுதியில் மின்தடை ஏற்பட்ட போது மானாமதுரை காவல் நிலையம் இருளில் மூழ்கியது. 


இதனை அறிந்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளரிடம் அங்கு பணியின் போது சீருடையில் இல்லாத காவலர் ஒருவர் செய்தியாளரை அத்துமீறியதுடன், செல்போனையும் பறிக்க முற்பட்டு, செய்தி எடுக்க விடாமல் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் செய்தியாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்தவர்கள் இருவரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். 


இச்சம்பவம் குறித்து சில பத்திரிகை வட்டார நண்பர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறுகையில், தங்களின் உயிரை துச்சமென மதித்து மக்கள் சேவையில் இரவு பகல் பாராமல் தங்களை ஈடுபடுத்தி வரும் பத்திரிக்கையாளர்களை தொடர்ந்து கையாள்வதில் அரசியல் தொடங்கி அதிகாரிகள் வரை தவறு செய்து வரும் இன்றைய சூழ்நிலையில், இதுபோன்ற பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிராக அத்துமீறுபவர்கள் தங்களை யாரும் தண்டிக்கவோ தட்டிக் கேட்கவோ முடியாது என்ற தவறான எண்ண நிலைபாடு கொண்டுள்ளது வேதனைக்குரியது. 


எனவே தான் ஒரு அரசு பணியில் பொதுமக்களின் சேவையில் ஈடுபட்டு வருகின்றோம் என்பதை மறந்து, இது போன்ற குற்ற செயல்களில் கூடுதலாக பணியின்போது சீருடை இல்லாமல் தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் இவருக்கு நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுக்க ஒட்டுமொத்த சிவகங்கை மாவட்ட பத்திரிகையாளர்கள் சார்பாக வலியுறுத்திக் கொள்வதாக தெரிவித்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad