சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் பொருளியல் மன்றத் துவக்க விழா மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழா இன்று நடைபெற்றது.
கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் பொறுப்பு முதல்வர் முனைவர் துரை தலைமை வகித்தார். மூன்றாம் ஆண்டு மாணவி கார்த்திகா வரவேற்புரை ஆற்றினார். பொருளியல் துறைத் தலைவர் ஏபிஎஸ் செல்வராஜ் அறிமுக உரை ஆற்றினார்.
வரலாற்றுத் துறைத் தலைவர் முனைவர் நிலோபர் பேகம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பொருளியல் மாணவர்கள் சிறப்பாகப் படித்து தங்கள் வாழ்வில் வெற்றி பெற வேண்டுமென சிறப்புரையாற்றி பேச்சு, கவிதை, கட்டுரை, ஓவியம் மற்றும் இசைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். முதுகலை முதலாமாண்டு மாணவி மெர்லின் நன்றி கூறினார்.
இதில் பொருளியல் துறை பேராசிரியர் சூரியகாந்த், கெளரவ விரிவுரையாளர்கள் மற்றும் மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment