இதுகுறித்து மேலத்தெருவில் வசிக்கும் கிராம பொதுமக்களிடம் கேட்டபோது, அவர்களில் சிலர் கூறுகையில், "மேலத்தெருவில் சர்வே செய்தது போல் தாங்கள் வசிக்கும் தெருவில் செய்யப்படாமல் பிற சமூகத்தவர்கள் வசிக்கும் மற்ற மூன்று தெருக்களிலும் பேவர்ப்ளாக் சாலை மற்றும் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து வீட்டிற்கும் குடிநீர் குழாய் அமைத்துள்ளனர்.
மேலும் மேலத்தெருவில் உள்ள மற்ற பல வீடுகளுக்கு குடிநீர் குழாய் அமைத்து தரப்படவில்லை. அதேபோல் பேவர்ப்ளாக் சாலை மேலத்தெரு காலனி வீதியில் தொடங்கும் முதல் சிறிது தூர மற்றும் முடிவடையும் சிறிது தூர இடைவெளி விட்டு இடையில் உள்ள 50 மீட்டர் தொலைவிற்கு மட்டுமே பேவர்ப்ளாக் சாலை போட்டுள்ளனர். இத்தகைய செயலானது காழ்ப்புணர்வு மற்றும் ஒருதலைபட்சம் காட்டும் வகையிலும் உள்நோக்கத்துடனும் பொதுமக்களை வஞ்சிக்கும் விதமாக செயல்பாடுவதை வெளிப்படையாக காட்டுகிறது. இதன் வெளிப்பாடாக மழைக்காலங்களில் பேவர்ப்ளாக் சாலை அமைக்காத இடங்களில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக சுகாதாரமற்று நோய்த்தொற்று ஏற்படும் நிலையில் இருக்கிறது. இதனால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இது குறித்து வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுலவரிடம் நடவடிக்கை எடுக்க கோரி ஏற்கனவே மனு அளிக்கப்பட்டுள்ளது. பிடிஓ அவர்கள் நேரில் ஆய்வுக்கு வருவதாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே உடனடியாக இதுகுறித்து வட்டார வளர்ச்சி மற்றும் வட்டாட்சி துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மேலத்தெரு கிராம பொதுமக்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்" என்றனர்.
- செய்தியாளர் லிவிங்ஸ்டன்
No comments:
Post a Comment