சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா தேவர் சிலையில் 60 ஆம் ஆண்டு தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மானாமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமம் பொதுமக்களான ஏ. விளாக்குளம், கீழமேல்குடி, கிழங்காட்டூர், தீயனூர், நெடுங்குளம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பெரும் திரளாக பால்குடம் எடுத்து தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பட்டாசுகளை வெடித்தும் வெகு விமரிசையாக கொண்டாடினர்.
மேலும் பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டு, சிலம்பாட்டம், கும்மி ஆட்டம், ஒயிலாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன, இதில் மானாமதுரை நகர் காவல் ஆய்வாளர் முத்துகணேஷ் அவர்களின் தலைமையிலான சிறப்பு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- செய்தியாளர் லிவிங்ஸ்டன்
No comments:
Post a Comment