சிவகங்கை உள்ள 48 காலனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை சந்தையில் உள்ள மீன் கடைகளில் உணவு பாதுகாப்பு துறை சார்பாக திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் ஆறு மீன் கடைகள் ஆய்வுக் குட்படுத்தப்பட்டது. அதில் இரண்டு கடைகளில் ஃபார்மலின் கடந்த மீன்கள் விற்பனை செய்வதை ஃபார்மலின் ஆய்வு கிட்டு மூலம் கண்டறிந்த உணவு பாதுகாப்பு துறையினர் சுமார் 25 கிலோ மீன்களை கீழே கொட்டி அழித்தனர்.
அக்கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டதுடன் தலா ரூபாய் 3 ஆயிரம் அபதாரமும் விதிக்கிவிட்டது. மேலும் பிளாஸ்டிக் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வாய்வில் சிவகங்கை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் எம். சரவணகுமார் மற்றும் மீன்வளத்துறை மேற்பார்வையாளர் கே. கணேசன் ஆகியோர் சோதனையில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment