சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா சிப்காட் பகுதியை சேர்ந்தவர் கலைச்செல்வன் (26). இவர் நேற்று அப்பகுதியில் நின்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த வாலிபர் ஒருவர் திடீரென எதிர்பாராத விதமாக அரிவாளை காட்டி மிரட்டியதோடு அவரிடமிருந்த ரூபாய் 200யும் பறித்துச் சென்றுள்ளார்.
இச்சம்பவம் குறித்து கலைச்செல்வன் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் மதுரைவீரன் (20) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- செய்தியாளர் லிவிங்ஸ்டன்
No comments:
Post a Comment