சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம் தவத்திரேந்தல் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் புதிதாக கட்டப்பட்ட நாடக மேடையினை முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ. தமிழரசிரவிக்குமார் வைத்தார். தொடர்ந்து திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம் மேல வெள்ளூர் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட புதிய பயணியர் நிழற்குடையினையும் சட்டமன்ற உறுப்பினர் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் பேரூராட்சி மன்ற தலைவர் த. சேங்கைமாறன், ஒன்றிய கழக செயலாளர் கடம்பசாமி, பேரூர் கழக செயலாளர் நாகூர் கனி, ஒன்றிய கவுன்சிலர்கள் லாடந்தனல் சுப்பையா, சங்கங்குளம் ஈஸ்வரன், இளைஞரணி தேவதாஸ், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிளைக் கழக செயலாளர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் லிவிங்ஸ்டன்
No comments:
Post a Comment