சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள முதன்மை நீதிமன்ற வளாகத்தின் முன்பாக மானாமதுரை அனைத்து வழக்கறிஞர் சங்கம் சார்பாக உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களின் தொழிலை நசுக்கும் விதமாக இ-பைலிங் என்ற நடைமுறையை அமல்படுத்துவதை திரும்ப பெறக்கூறியும், காவிரி தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மானாமதுரை வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு இரா. சுரேஷ்பாபு அவர்கள் தலைமை ஏற்றார். மேலும் இந்நிகழ்வில் மூத்த மற்றும் இளம் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு கண்டனம் முழக்கம் எழுப்பி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
- செய்தியாளர் லிவிங்ஸ்டன்
No comments:
Post a Comment