சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தமிழ்நாடு அரசு SGFI சார்பில் மாநில அளவிலான கராத்தே தேர்வு போட்டி கோயம்புத்தூர் கே. பி. ஆர். பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியில் மானாமதுரையில் இயங்கி வரும் நாகர்ஜூன் ஷிட்டோ ரியூ கராத்தே பள்ளியை சேர்ந்த மாணவி ரதீபா போன்குமரன் முதல் பரிசான தங்க பதக்கம் வென்று தேர்வாகியுள்ளார். இவர் மானாமதுரையில் உள்ள செயின் ஜோசப் மேல் நிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருவது குறிப்பிடத்தக்கது.
வருகின்ற டிசம்பர் மாதத்தில் உத்தர பிரதேசத்தில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொள்ளவுள்ளார். மாணவி ரதீபாவை கராத்தே பயிற்சியாளர் சிவ. நாகர்ஜூன், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
- செய்தியாளர் லிவிங்ஸ்டன்
No comments:
Post a Comment