சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இன்று காலை 6 மணி அளவில் கே எம் சி மருத்துவமனையில் துவங்கிய மினி மாரத்தான் தேவர் சிலை,பெரியார் சிலை, செக்காலை ரோடு, அழகப்பா மியூசியம்,கல்லூரி சாலை, 100 அடி ரோடு, புதிய பேருந்து நிலையம் வழியாக மீண்டும் கே எம் சி மருத்துவமனையை போட்டியாளர்கள் வந்தடைந்தனர், போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு பரிசுத் தொகை காண காசோலை, கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக டாக்டர்.ஆர். ஸ்டாலின் ஐபிஎஸ், ஸ்ரீ சங்கர் குமார், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் ஜி.ரவி, தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எம்.சுந்தர் ஆகியோர் பங்கேற்று போட்டியாளர்களை உற்சாகப்படுத்தி பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர்.
- மாவட்டச் செய்தியாளர் முத்துராஜன்
No comments:
Post a Comment