சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வியாழக்கிழமை வார சந்தையில் உணவு பாதுகாப்புத் துறை மற்றும் நகராட்சி துறை சார்பாக திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் மீன் கடைகளில் நடத்தப்பட்ட ஆய்வில் சுமார் 25 முதல் 30 கிலோ வரையிலான உண்ணத்தகாத வகையில் வியாபாரத்திற்கு வைக்கப்பட்டிருந்த கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத்துறையினர் அதனை உடனடியாக கீழே கொட்டி அவற்றின் மீது பினாயில் தெளித்து அழித்தனர். அதனைத் தொடர்ந்து இரண்டு மீன் கடைகளுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தொடர்ந்து நடந்த ஆய்வில் சுமார் 10 கிலோ வரையிலான கலர் சாயமிடப்பட்ட பட்டானிகள் கைப்பற்றப்பட்டது. அதேபோல் சுமார் 4 கிலோ அளவில் பிலாஸ்டி பொருட்கள் நகராட்சிதுறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு நகராட்சி அலுவலகத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. மேலும் இரண்டு கடைகளுக்கு அபதார தொகையும் விதிக்கப்பட்டது. நடைபெற்ற இந்த ஆய்வில் சானிட்டரி இன்ஸ்பெக்டர் திரு பாண்டி செல்வம், உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் திரு சரவணகுமார், நகராட்சி ஊழியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் ஆகியோர் தீவிர ஆய்வில் ஈடுபட்டனர்.
- செய்தியாளர் லிவிங்ஸ்டன்
No comments:
Post a Comment