இதற்கிடையில் நேற்று நள்ளிரவில் மது குடி போதையில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த கீழமேல்குடி தெக்கூர் கிராமத்தை சேர்ந்த ஆதியின் நண்பர்களான நான்கு இளைஞர்கள் சேர்ந்து அப்பெண்ணை வாளை கொண்டு கழுத்தை அறுத்து விடுவோம் என மிரட்டி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து துன்புறுரித்தியது தெரிய வந்ததையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் தகவல் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் மானாமதுரை நகர் காவல் நிலையத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் ஒடிசா பெண் கற்பழிக்கப்பட்ட விவகாரம் குறித்து சிவகங்கை எஸ்பி திரு பி.கே. அரவிந்தன், ஏடிஎஸ்பி திரு நமசிவாயம், டிஎஸ்பி திரு கண்ணன் ஆகியோர் மானாமதுரை காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய நான்கு இளைஞர்களை கையும் களவுமாக பிடிக்க ஏதுவாக இன்ஸ்பெக்டர் திரு முத்துகணேஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் நான்கு இளைஞர்கள் சேர்ந்து திருமணமாகி கணவரை இழந்து வாழும் வடமாநில பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு கொடூர சம்பவம் மானாமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment