தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டியினை கொம்புகரனந்தல் மேல்நிலைப் பள்ளியில் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 9 September 2023

தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டியினை கொம்புகரனந்தல் மேல்நிலைப் பள்ளியில் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்.


தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வி துறையின் சார்பில் வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டியினை மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொம்புகரனந்தல் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் அமைச்சரும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ. தமிழரசிரவிக்குமார் அவர்களின் தலைமையில் மாணவ மாணவிகளுக்கு வழங்கினார். இதில் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் மிதிவண்டியை வழங்கியதோடு தானும் மாணவ மாணவிகளுடன் மிதிவண்டியை ஓட்டி அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

இந்நிகழ்வில் ஒன்றிய பெருந்தலைவர் திருமதி லதா அண்ணாத்துரை, கொம்புகரனந்தல் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி ராஜலக்ஷ்மி முருகன், தலைமை செயற்குழு உறுப்பினர் திரு ராமையா, கூட்டுறவு சங்க தலைவர் திரு நெடுஞ்செழியன், தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் திரு புவியரசு, கட்டிக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி சாந்தி தமிழ்நேசன், கட்டிக்குளம் ஊராட்சி மன்ற துணை தலைவர் திரு தமிழ்நேசன், ராஜகம்பீரம் ஊராட்சி மன்ற தலைவர் திரு முஜிப் ரஹ்மான், வட்டார கல்வி அலுவலர் திருமதி ஹஸ்மிதா பானு, நல்லசிரியர் திரு சுரா. கிரேசியஸ், தலைமையாசிரியர் திருமதி வாசுகி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் இதில் கொம்புகரனேந்தல் திரு வரதராஜன், தீத்தான்பேட்டை நிர்வாகிகள் திரு சேதுபாண்டி, திரு அஞ்சுமரம், திரு எழுமலை ராஜன், ராஜகம்பீரம் நிர்வாகிகள் திரு காஜாமைதீன், திரு முருகன், திரு முத்துமாயன், மேலப்பசலை நிர்வாகிகள் திரு சடையப்பன், மானாமதுரை நிர்வாகிகள் திரு சசிபிரசாத், திரு சிவா, மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் திரு வளர்மதி, பத்திரிகை நண்பர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

- செய்தியாளர் லிவிங்ஸ்டன் 

No comments:

Post a Comment

Post Top Ad