சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ரயில் சந்திப்பில் எர்ணாகுளத்தில் இருந்து மானாமதுரை மார்க்கமாக வேளாங்கண்ணி செல்லும் அதிவேக விரைவு வண்டி மானாமதுரை ரயில் நிலைய சந்திப்பில் நின்று செல்லாமல் போய் வந்ததையடுத்து வருகின்ற செப்டம்பர் 25 ஆம் தேதி முதல் மானாமதுரை சந்திப்பில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த விரைவு ரயில் வண்டியானது எர்ணாகுளம் - வேளாங்கண்ணிக்கு மானாமதுரை மார்க்கமாக செல்லும்போது இரவு 11.45 ரயில் நிலையத்தில் நின்று 11.50 மணிக்கு புறப்பட்டுச் செல்லும் என்றும் மறு மார்க்கமாக வேளாங்கண்ணி - எர்ணாகுளத்திற்கு செல்லும்போது மானாமதுரை ரயில் நிலையத்தில் அதிகாலை 12.25 மணிக்கு வந்தடைந்து 12.30 மணிக்கு புறப்படும் என்று தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இதன் மூலம் மானாமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பெரும் பயன்பெற ரயில் வண்டியை நின்று செல்ல வழிவகை செய்த இரயில்வே துறைக்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
- செய்தியாளர் லிவிங்ஸ்டன்
No comments:
Post a Comment