மானாமதுரை கோவில் வளாகத்தை ஒயின் ஷாப் பாராக மாற்றி வரும் ஆசாமிகள், நடவடிக்கை எடுக்குமா காவல்துறை? - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 7 September 2023

மானாமதுரை கோவில் வளாகத்தை ஒயின் ஷாப் பாராக மாற்றி வரும் ஆசாமிகள், நடவடிக்கை எடுக்குமா காவல்துறை?

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் கீழமேல்குடி பிரதான சாலை ஆனந்தவள்ளி நகரில் அமைந்துள்ள அய்யனார் கோவில் வளாகத்தில் நாளுக்கு நாள் குடிகாரர்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது என்று பொதுமக்களும் தன்னார்வலர்களும் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கோவிலை கடந்து செல்லக்கூடியவர்களும் அய்யனார் கோவிலுக்கு வரும் பக்தர்களும் இரவு நேரங்களில் பெரும் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இதனை பலமுறை காவல்துறைக்கு தகவல் அளித்தும் பயனில்லை என்கின்றனர். இங்கு மது அருந்த கூடாது என்ற விளம்பர பலகை வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் காவல்துறையினரை வலியுறுத்தி வருகின்றனர்.

இரவு பகல் என பாராமல் 24 மணி நேரமும் பத்து இருபது பேர் என கூட்டம் கூட்டமாக வந்து அய்யனார் கோவிலை சுற்றி வளைத்து ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். குடித்துவிட்டு பாட்டில்களை தரையில் உடைத்தும், தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் கப்புகள் மற்றும் திண்பண்ட  குப்பைகளை அங்கேயே வைத்து விட்டு, அங்குள்ள சிலைகளுக்கு சேதம் விளைவிக்குமாறும் செய்து வருகின்றனர் என்று பொதுமக்கள் மற்றும் நகர் வாசிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பொதுமக்கள் பெண்கள் குழந்தைகளை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் மானாமதுரை நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறையினரும் எந்த ஒரு அசம்பாவிதமும் நடந்துவிடாதவாறு இந்த சட்டவரோத கும்பலை தடுத்திட தக்க நடவடிக்கை எடுத்துதர வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் கோயில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தாழ்மையோடு கேட்டுக்கொள்கின்றனர். 

- செய்தியாளர் லிவிங்ஸ்டன் 

No comments:

Post a Comment

Post Top Ad