தென்னிந்திய அளவிலான கராத்தே சாம்பியன் போட்டியில் தங்கம் வென்ற மானாமதுரை மாணவி, குவியும் பாராட்டு. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 11 September 2023

தென்னிந்திய அளவிலான கராத்தே சாம்பியன் போட்டியில் தங்கம் வென்ற மானாமதுரை மாணவி, குவியும் பாராட்டு.

தென்னிந்திய அளவிலான கராத்தே சாம்பியன் போட்டி கேரளாவில் உள்ள 'ஜிம்மி விளையாட்டு அரங்கில்' செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய இரு தேதிகளில் தொடர்ந்து நடைபெற்று நிறைவடைந்தது. இந்நிலையில் இப்போட்டியில் பங்கேற்ற சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இயங்கி வரும் 'நாகர்ஜூன் ஷிட்டோ ரியூ கராத்தே பள்ளியை' சேர்ந்த மாணவி லலினா ரவீந்திரன் ஜுனியர் சண்டை பிரிவில் கலந்து கொண்டு முதல் பரிசான தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். 


இப்போட்டியை தொடர்ந்து டெல்லியில் நடைபெறவிருக்கும் 'ஆல் இந்தியா சாம்பியன் கராத்தே' போட்டிக்கும் லலினா ரவீந்திரன் தேர்வாகியுள்ளார். தங்கம் வென்று ஊர் திரும்பிய தங்க மாணவி லலினாவை மற்றும் பயிற்சியாளர் மாஸ்டர் திரு சிவ. நாகர்ஜூன் அவர்களையும் தங்களுக்கும் தங்கள் ஊருக்கும் பெருமை சேர்த்த இருவருக்கும் மாணவியின் பெற்றோர், பள்ளி ஆசிரிய பெருமக்கள் மற்றும் மானாமதுரை நகர்புற வாசிகள் உற்சாகத்தோடு பாராட்டி மாலை அணிவித்து தங்களின் மணமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


மானாமதுரையில் இயங்கி வரும் நாகர்ஜூன் ஷிட்டோ ரியூ கராத்தே பள்ளி மாணவர்கள் பரிசுகளை பெறுவது என்பது இது முதல் தடவை இல்லை இதற்கு முன்னர் கடந்த சமீப காலங்களில் தொடர்ந்து பல பதக்கங்களை இந்த கராத்தே பள்ளியில் பயிலும் மாணவர்கள் தொடர்ந்து பெற்று வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பல பதக்கங்களை நாகர்ஜூன் ஷிட்டோ ரியூ கராத்தே பள்ளி பெற மாஸ்டர் திரு நாகர்ஜூன் அவர்களுக்கு தமிழக குரல் செய்தி நிறுவனத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.


- செய்தியாளர் லிவிங்ஸ்டன் 

No comments:

Post a Comment

Post Top Ad