சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சிப்காட் ரயில்வே கேட் அருகில் உள்ள துணை மின் நிலையத்தில் செப்டம்பர் 12ஆம் தேதி நாளை காலை 11 மணி முதல் 1 மணி வரை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாகவும் சிவகங்கை வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் திரு குருசாமி அவர்களின் தலைமையிலும் 'மின் பயனீட்டாளர்கள் குறைதீர்ப்பு கூட்டம்' நடைபெற உள்ளது என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
எனவே மானாமதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் அனைவரும் தங்களின் விண்ணப்பங்கள் மற்றும் மனுக்கள் மீதான எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், நிறை குறைகள் குறித்த தொடர்பான தகவல்கள் போன்ற அனைத்து விபரங்களையும் இந்த குறை தீர்க்கும் கூட்டத்தை பயன்படுத்திக் கொண்டு பயனடையுமாறு மின்சார வாரியத்தால் அறிவுறுத்தப் படுகின்றனர்.
No comments:
Post a Comment