சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள ஆதிதிராவிடர் நலப் பள்ளி விடுதியில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திருமதி கயல்விழி அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் மாணவர்கள் தங்கும் விடுதியின் செயல்பாடுகள் குறித்தும், சமையல் கூடத்தில் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களின் தரம் மற்றும் உணவின் தரம் போன்ற விபரங்கள் குறித்தும் அமைச்சர் அவர்கள் ஆய்வின்போது கேட்டறிந்து கொண்டார்.
இந்த ஆய்வு நிகழ்வில் முன்னாள் அமைச்சரும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினருமான திருமதி ஆ. தமிழரசிரவிக்குமார் மற்றும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் திருமதி ஆஷா அஜித் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் நகர் கழகச் செயலாளர் க. பொன்னுச்சாமி, ஒன்றிய பெருந்தலைவர் திருமதி லதா அண்ணாதுரை மற்றும் அரசு துறையை சேர்ந்த பல அதிகாரிகள் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment