காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் முதுநிலைப் பாடங்களுக்கான மாணவர் சேர்க்கை. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 5 September 2023

காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் முதுநிலைப் பாடங்களுக்கான மாணவர் சேர்க்கை.


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் 2023-2024ஆம் கல்வியாண்டிற்கான முதுநிலைப் பாடங்களுக்கான மாணவர் சேர்க்கை செப்டம்பர் 11ஆம் தேதியன்று நடைபெற இருக்கிறது. 

முதுகலைப் படிப்புகளான எம்.ஏ தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், எம்.காம், மற்றும் முதுநிலை அறிவியல் படிப்புகளான எம்.எஸ்சி கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், புவி அமைப்பியல், கணினி அறிவியல் போன்ற பாடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு செப்டம்பர் 11ஆம் தேதி திங்கட்கிழமை காலை 9மணிக்கு சிறப்புப் பிரிவினருக்கும், காலை 10 மணிக்கு பொதுப் பிரிவினருக்கும் கல்லூரியில் அந்தந்த துறைகளில் நடைபெற இருப்பதால் விண்ணப்பித்த மாணவர்கள் இணைய வழியில் விண்ணப்பித்த  விண்ணப்ப படிவம் (இரண்டு) மற்றும் அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன்  கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும்  எனக் கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment

Post Top Ad