அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் புவி அமைப்பியல் துறையில் பயின்ற முன்னாள் மாணவர்கள் “புவி அமைப்பியல் துறை முன்னாள் மாணவர்கள் சங்கம்" என்ற அமைப்பை ஏற்படுத்தி பதிவு செய்து நடத்தி வருகின்றனர். அந்த அமைப்பின் சார்பாக புத்தக வெளியீட்டு விழா இன்று கல்லூரியின் உமையாள் அரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவில் இத்துறையின் முன்னாள் மாணவரும் பேராசிரியருமான மாணிக்கவாசகம் எழுதிய உருமாறிய பாறைகள் (Metamorphic Petrology) எனும் புத்தகத்தை அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் முதல்வர் பெத்தாலெட்சுமி வெளியிட புவி அமைப்பியல் துறையின் தலைவர் பேராசிரியர் உதயகணேசன் பெற்றுக்கொண்டார். நூலாசிரியரை அறிமுகம் செய்து பேசிய இச்சங்கத்தின் தலைவர் பேராசிரியர் லாரன்ஸ் இந்த புத்தகம் நீண்ட நாள் அனுபவத்தின் பலனாக உருவானதாக குறிப்பிட்டார்.
விழாவில் பேராசிரியர்களும், புவி அமைப்பியல் துறையின் முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். செய்தியாளர் முத்துராஜன்
No comments:
Post a Comment