மானாமதுரை அரிமண்டபம் இராஜாக்கள் குடியிருப்பு - முளைப்பாரி உற்சவ விழா கொண்டாடப்பட்டது. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 28 September 2023

மானாமதுரை அரிமண்டபம் இராஜாக்கள் குடியிருப்பு - முளைப்பாரி உற்சவ விழா கொண்டாடப்பட்டது.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா மேலப்பசலை பஞ்சாயத்திற்குட்பட்ட  அரிமண்டபம் இராஜாக்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள ஸ்ரீ சுந்தரவல்லி அய்யனார் கோவிலில் முளைப்பாரி உற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்று முடிந்தது. 

இவ்விழாவானது இக்கிராமத்தில் ஆண்டுதோறும் மக்களின் குறைகள் தீரவும், விவசாயம் செழிக்கவும், மழை வேண்டியும் ஏழு நாட்களுக்கு முன்பாகவே கைகளில் காப்பு கட்டி, விரதம் இருந்து முளைப்பாரி ஓடுகளில் நவதானியங்களை விதைத்து நன்றாக முளைத்தவுடன் கோயில் முன்பாக வைத்து கும்மி பாட்டு, ஒயிலாட்டம் என கொண்டாடி மகிழ்வது வழக்கம். இதனைத் தொடர்ந்து கிராம பொதுமக்கள் கடந்த செவ்வாய்கிழமை இரவு சுந்தரவல்லி அய்யனார் கோவிலில் பக்தர்கள் அனைவரும் மூன்று முதல் ஒன்பது சட்டிச்சோறு எடுத்து கோயில் முன்பு படையல் வைத்து வழிபட்டனர்.


அதனைத் தொடர்ந்து புதன்கிழமை அன்று சுமார் 200 முளைப்பாரி ஓடுகளை சிறியவர் முதல் வயதான பெண்கள் என திரலாக பக்தர்கள் தலையில் தூக்கி சுமந்து விவசாயத்திற்கு சொந்தமான கண்மாயில் தண்ணீரில் முளைப்பாரி ஓடுகளை விட்டபடியே சூரியன் இருக்கும் திசையை நோக்கி வணங்கி நேர்த்திக்கடனை செலுத்தி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


- செய்தியாளர் லிவிங்ஸ்டன் 

No comments:

Post a Comment

Post Top Ad