காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக ரத்ததான முகாம் நடைபெற்றது. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 20 September 2023

காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக ரத்ததான முகாம் நடைபெற்றது.


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக ரத்ததான முகாம் இன்று கல்லூரியின் உமையாள் அரங்கில் நடைபெற்றது. இம்முகாமிற்கு கல்லூரியின் முதல்வர் பெத்தாலெட்சுமி வழிகாட்டுதலில், கல்லூரியின் பொறுப்பு முதல்வர் துரை தலைமை வகித்தார். 

யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் பாரதிராணி வரவேற்புரையாற்றினார். இந்திய ரெட் கிராஸ் சொசைட்டியின் சிவகங்கை மாவட்ட தலைவர் பகீரத நாச்சியப்பன் ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார். காரைக்குடி ரத்த வங்கி மருத்துவ அலுவலர் மருத்துவர் அருள்தாஸ் முன்னிலை வகித்தார்.  இந்திய ரெட் கிராஸ் அமைப்பின் சிவகங்கை மாவட்ட செயலாளர் சுந்தரராமன், யூத் ரெட் கிராஸ் அமைப்பின் அழகப்பா பல்கலைக்கழக மண்டல ஒருங்கிணைப்பாளர் விநாயகமூர்த்தி, காரைக்குடி குருதிக்கொடையாளர்கள் சங்க அறக்கட்டளையின் நிறுவனர் பிரகாஷ் மணிமாறன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். 


இதில் அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் 60 மாணவ, மாணவியர்  பங்கேற்று ரத்ததானம் செய்தனர். கல்லூரியின் நாட்டுநலப்பணித் திட்ட அலுவலர் சுந்தரி நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் பாரதி ராணி நாட்டுநாட்டு நலப் பணித் திட்ட அலுவலர்கள் சுந்தரி, தெய்வமணி, லட்சுமணக்குமார், சித்ரா ஆகியோர் செய்திருந்தனர். செய்தியாளர் முத்துராஜன்

No comments:

Post a Comment

Post Top Ad