சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் பேரறிஞர் அண்ணா ஆய்வு இருக்கையின் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு பல்கலைக்கழக அளவில் இணைவுக் கல்லூரி மாணாக்கர்களுக்குக் கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன.
அப்போட்டிகளில் அழகப்பா அரசு கலைக் கல்லூரி சார்பில் இளங்கலைத் தமிழ் முதலாமாண்டு மாணவி மாதரசி, இளங்கலை வணிகவியல் இரண்டாமாண்டு மாணவிகள் நாகவர்த்தினி, ஶ்ரீநிதி ஆகியோர் பங்கேற்றனர். பேச்சுப் போட்டியில் “மானுடம் போற்றிய மாண்பாளர் அண்ணா” என்ற தலைப்பில் பேசிய ஶ்ரீநிதி இரண்டாம் பரிசு பெற்றார். வெற்றி பெற்று பரிசு பெற்ற மாணவிக்குக் கல்லூரி முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி, நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் மார்ட்டின் ஜெயப்பிரகாஷ், உறுப்பினர்கள் செல்வமீனா, ஷர்மிளா, லெட்சுமணக்குமார் உள்ளிட்டோர் வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
- செய்தியாளர் முத்துராஜன்
No comments:
Post a Comment