சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா மேலப்பசலை ஊராட்சிக்குட்பட்ட தீயனூர் கிராமத்தில் நியாய விலை கடை இல்லாததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து கிராம பொதுமக்களிடம் கேட்டபோது அவர்கள் கூறுகையில், "எங்கள் தீயனூர் கிராமத்தில் நியாய விலை கடை இல்லாததால் நடமாடும் நியாய விலை கடை அதாவது தமிழக அரசின் 'வீடு தேடி வரும் ரேஷன்' திட்டத்தின் கீழ் லாரிகளில் ரேஷன் பொருட்கள் எங்கள் கிராமத்தை வந்தடைந்து நியாய விலை கடை இல்லாத பட்சத்தில் மக்களுக்கு ரேஷன் பொருட்களை விநியோகிப்பதற்காக கண்மாய் அருகில் உள்ள புளிய மரத்தடியின் கீழ் ரேஷன் பொருட்களை அவ்வப்போது விநியோகித்து வரும் அவல சூழ்நிலைக்கும் பெரும் சிரமத்திற்கும் துயரத்திற்கும் எங்கள் ஊர் கிராம பொதுமக்கள் உள்ளாக்கப்பட்டு வருகிறோம். எங்களுக்கு தேவையான நியாய விலை பொருட்கள் பெற வேண்டி எங்கள் கிராமத்தில் இருந்து தொலைவில் இருக்கின்ற மேலப்பசலை மற்றும் அரிமண்டபத்தில் உள்ள நியாய விலை கடைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
இதற்கு தகுந்த உடனடி தீர்வு வேண்டியும் ஊர் பொதுமக்களின் நலன் கருதியும் எங்கள் ஊர் கிராமத்திற்கு என தனியாக புதிய நியாய விலைக்கடை கட்டிடத்தை அமைத்து தருமாறு தீயனூர் கிராம பொதுமக்கள் சார்பாக மாவட்ட நிர்வாகத்திற்கும் உள்ளாட்சி நிர்வாகத்திற்கும் எங்களது கோரிக்கையை முன் வைத்துக் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்" என்றனர்.
- செய்தியாளர் லிவிங்ஸ்டன்
No comments:
Post a Comment