சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் அரணையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்வி கற்கும் குழந்தைகள் மற்றும் மாணவ மாணவிகள் அமர்ந்து கல்வி கற்பதற்கு ஏதுவாக இருக்கும் வகையில் நாம் தமிழர் கட்சியின் இளையான்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு சேசுராஜா அவர்களின் சார்பாகவும் தலைமையிலும் நாற்காலிகள் மற்றும் மேஜைகளை இலவசமாக வழங்கி மாணவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
அவரின் இந்த செயலை பாராட்டும் விதமாக பொதுமக்கள் பெற்றோர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சி ஒன்றிய மற்றும் ஊராட்சி நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பெருமளவில் கலந்துக்கொண்டனர்.
- செய்தியாளர் லிவிங்ஸ்டன்
No comments:
Post a Comment