கலைஞர் உரிமைத் தொகை ரூ1000 கிடைக்கவில்லையா? தாலுகா உதவி மையங்கள் மூலம் விவரம் பெறுங்கள், கலெக்டர் ஆஷா அஜித் அறிவுப்பு. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 15 September 2023

கலைஞர் உரிமைத் தொகை ரூ1000 கிடைக்கவில்லையா? தாலுகா உதவி மையங்கள் மூலம் விவரம் பெறுங்கள், கலெக்டர் ஆஷா அஜித் அறிவுப்பு.


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பிஎல்பி பேலஸ் மகளிர் காண உரிமை தொகை வழங்கும் விழா, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ரூ.1000/- வழங்கும் தொடக்க விழா 15.09.2023 இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம் மற்றும்  காரைக்குடி நகரில் PLP பேலஸ் திருமண மண்டபத்தில்(15.09.2023 ) இன்று காலை 10.00 மணியளவில்  கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்களால் பயனாளிகளுக்கு ரூ.1000/- வழங்கும் நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டது.  

 

மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பான தகவல்கள் மற்றும் விளக்கங்களை பொதுமக்கள் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக, ஒவ்வொரு தாலுகா அலுவலகங்களில் உதவி மையங்கள் (Help Desk) செயல்பட்டு வருகின்றன. 


மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  7845145001என்ற எண்ணிலும், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 7845738002 என்ற எண்ணிலும், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில்  7845014004என்ற எண்ணிலும், சிவகங்கை வட்டாட்சியர் அலுவலகத்தில்  8438856008என்ற எண்ணிலும், மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகத்தில் 8925786003  என்ற எண்ணிலும், காளையார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் 8438957006 என்ற எண்ணிலும், திருப்புவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 8925664001என்ற எண்ணிலும், இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 9042317001என்ற எண்ணிலும், திருப்பத்தூர்  வட்டாட்சியர் அலுவலகத்தில்  8925078921 என்ற எண்ணிலும், காரைக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 8807378005 என்ற எண்ணிலும், தேவகோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் 8870362101 என்ற எண்ணிலும், சிங்கம்புணரி வட்டாட்சியர் அலுவலகத்தில் 8122576001 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். 


மேலும், பொது மக்கள் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் குறித்த தகவல்கள் தொடர்பாகவும், உதவி மையங்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment

Post Top Ad