சிவகங்கை மாவட்டம் ஸ்வச்தா ஹி சேவா திட்டத்தின் ஒரு பகுதியாக மானாமதுரை நகராட்சியும் சிவகங்கை மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடத்திய, மாபெரும் வைகை நதிக்கரையை சுத்தம் செய்யும் பணியில் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் முதல்வர் பெத்தாலெட்சுமி வழிகாட்டுதலின்படி கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் மானாமதுரை நகராட்சி துப்புரவு பணியாளர்கள், இந்தோ திபெத் எல்லை காவல் படையினர், மற்றும் நகர பொதுமக்கள் ஆகியோருடன் இணைந்து வைகை நதியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இம்முயற்சி சுற்றுச்சூழல் தூய்மையை மேம்படுத்துவதையும் நமது இயற்கை வளங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது ஆகும், இந்நிகழ்வில் ஆற்றங்கரையோரமாக மாணவர்களால் மரக்கன்றுகள் நடப்பட்டன. அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் நாட்டுநலப் பணித் திட்ட அலுவலர் முனைவர் சித்ரா மாணவர்களை ஒருங்கிணைத்தார்.
- மாவட்டச் செய்தியாளர் முத்துராஜன்
No comments:
Post a Comment