சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதிக்குட்பட்ட திருப்புவனம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் திருப்புவனம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சார்பில் விலையில்லா மிதிவண்டியினை பள்ளி மாணவர்களுக்கு மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ. தமிழரசி ரவிக்குமார் தலைமை ஏற்று வழங்கினார். இதில் சட்டமன்ற உறுப்பினர் மாணவர்களுடன் இணைந்து பறை இசைத்து பெருமகிழ்ச்சியில் திலைத்தார்.
இந்நிகழ்வில் திருப்புவனம் பேரூராட்சி மன்ற தலைவர் திரு த. சேங்கைமாறன், கடம்பசாமி, நாகூர் கனி, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஒன்றிய துணைதலைவர், ஒன்றிய கவுன்சிலர்கள், பேரூராட்சி துணைத் தலைவர், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், அரசு துறை அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் லிவிங்ஸ்டன்
No comments:
Post a Comment