அடுப்பில்லா சமையல் போட்டியில் மாணவிகள் உமா மகேஸ்வரி முதல் பரிசும், சிவசங்கரி இரண்டாம் பரிசும் பெற்றனர். சுவரொட்டி தயாரித்தல் போட்டியில் மாணவி வெஸ்லியா இரண்டாம் பரிசும், இசைக்கருவி வாசித்தல் போட்டியில் மாணவர் எஸ்றாசாம் இரண்டாம் பரிசும், மாணவி அன்னபூரணி மூன்றாம் பரிசும், காய்கறிகளைக் கொண்டு அணிகலன் செய்யும் போட்டியில் தாவரவியல் மாணவி லிபுஜா இரண்டாம் பரிசும், மாணவர் பன்னீர் செல்வம் மூன்றாம் பரிசும், நடனப்போட்டியில் மாணவிகள் ரஞ்சனி, முத்தழகு, லாவண்யா, ஜீவரஞ்சனி ஆகியோர் இரண்டாம் பரிசும் பெற்றனர்.
மௌன நாடகப் போட்டியில் இளங்கலை கணினி அறிவியல் மாணவிகள் ரதிமலர், தர்ஷினி, ஏஞ்சலின் ஜெனிபர் பங்கேற்றனர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றுக் கல்லூரிக்குப் பெருமை சேர்த்த மாணவ, மாணவிகளைக் கல்லூரி முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி பாராட்டினார். நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் மாரட்டின் ஜெயப்பிரகாஷ் மற்றும் உறுப்பினர்கள் செல்வமீனா, ஷர்மிளா, லடசுமணக்குமார் உள்ளிட்டோர் போட்டிகளுக்கு மாணவர்களை ஒருங்கிணைத்தனர்.
- மாவட்ட செய்தியாளர் முத்துராஜன்
No comments:
Post a Comment