வெறிநாய்க்கடி நோயை பரவாமல் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 28ஆம் நாள் உலக வெறிநாய்க்கடி நோய் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.காரைக்குடி வட்டத்தில் உள்ள மாணவர்களுக்கு ரேபிஸ் நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் இதை பொதுமக்களிடத்தில் கொண்டு செல்வதற்காகவும் அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் உள்ள முதுநிலை விலங்கியல் துறையில் இந்த ஆண்டு ரேபிஸ் தின விழிப்புணர்வுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தின் உதவி பேராசிரியர் ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.தடுப்பு மருந்து கண்டுபிடித்த லூயி பாஸ்டர் மறைந்த தினமான செப்டம்பர் 28ஆம் தேதி அவரது நினைவாக 2007 ஆம் ஆண்டு முதல் சர்வதேச ரேபிஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது என்று கூறினார்.மேலும் உலகில் இருந்து 2030 ஆம் ஆண்டிற்குள் ரேபிஸ் நோயை விரட்டி விட வேண்டும் என்ற குறிக்கோளை உலக சுகாதார நிறுவனம் முன் வைத்துள்ளது என்றும் நாயால் கடிபட்டு ரேபிஸ் நோய் பாதித்த மனிதனை காப்பாற்ற ரேபிஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
விலங்கியல் துறை இணைப் பேராசிரியர் சங்கர் பெருமாள் நன்றி கூறினார்.இந்த நிகழ்வினை இணைப்பேராசிரியர் எஸ் எஸ் என் சோமசுந்தரம் ஏற்பாடு செய்தார்.
- மாவட்ட செய்தியாளர் முத்துராஜன்
No comments:
Post a Comment