அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியல் துறை விளையாட்டு மைதானத்திலும், அழகப்பா பொறியியல் கல்லூரி விளையாட்டு மைதானத்திலும் இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த கிரிக்கெட் போட்டியில் அழகப்பா பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற 10 கல்லூரிகள் கலந்து கொண்டன. இதில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதல் பரிசை கீழக்கரை சையது ஹமீதியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், இரண்டாம் பரிசை ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லூரியும், மூன்றாவது பரிசை அழகப்பா அரசு கலைக் கல்லூரியும், நான்காவது பரிசை அழகப்பா பல்கலைக்கழக அணியும் பெற்றன. அதைத்தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கல்லூரியின் முதல்வர் பெத்தாலெட்சுமி வழிகாட்டுதலின்படி பொருளியல் துறைத் தலைவர் ஏ பி எஸ் செல்வராஜ் தலைமை வகித்தார்.
பேராசிரியர் கருணாகரன் வரவேற்புரை வழங்கினார். வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுக்கோப்பைகளை அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் ரவி வழங்கினார். அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் செந்தில்குமரன், சையது ஹமீதியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் ராஜசேகர், சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்க புரவலர் வரதராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆட்டநாயகன் விருதை சையது ஹமீதியா கல்லூரியின் பேராசிரியர் ஜெயராஜ் மற்றும் தொடர் நாயகன் விருதை சையது ஹமீதியா கல்லூரியின் பேராசிரியர் தவசி லிங்கம் ஆகியோர் பெற்றனர்.
அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் உடற்கல்வித்துறை இயக்குனர் அசோக் குமார் நன்றி கூறினார். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் அசோக்குமார் மற்றும் பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் செய்திருந்தனர்.
- மாவட்ட செய்தியாளர் முத்துராஜன்
No comments:
Post a Comment