அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் துவங்கிய இப் பேரணி கல்லூரி சாலை வழியாக புதிய பேருந்து நிலையத்தை அடைந்து அங்கிருந்து மீண்டும் கல்லூரியை வந்தடைந்தது. பேரணியில் நூற்றுக்கணக்கானமாணவ மாணவியர் இருசக்கர வாகனங்களிலும், நடந்து சென்றும் சிறுதானிய உணவு குறித்த விழிப்புணர்வுப் பதாகைககளை ஏந்தியவாறு கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் உமையாள் அரங்கில் சிறுதானிய உணவு குறித்த கண்காட்சியும், விழிப்புணர்வு போட்டிகளும் மாணவ மாணவிகளுக்கு நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மருத்துவர் பிரபாவதி மற்றும் சாக்கோட்டை உணவு பாதுகாப்பு அலுவலர் தியாகராஜன் காரைக்குடி நகர உணவு பாதுகாப்பு அலுவலர் வேல்முருகன் சிவகங்கை உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணக்குமார் காளையார்கோயில் உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜேஷ் குமார், உதவியாளர் கருப்பையா மற்றும் அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் பேராசிரியர்கள் பொருளியல் துறைத் தலைவர் ஏ பி எஸ் செல்வராஜ், கல்லூரியின் நுகர்வோர் பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் லதா மற்றும் பேராசிரியர்கள் வேலாயுத ராஜா, சரவணன், லட்சுமணக் குமார், சுந்தரி ,தெய்வமணி, சித்ரா , சர்மிளா, செல்வ மீனா, மார்ட்டின் ஜெயபிரகாஷ் ஆகியோர் செய்து இருந்தனர்.
- மாவட்ட செய்தியாளர் முத்துராஜன்
No comments:
Post a Comment