சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சியில் சந்தைக் கடைவீதி அருகில் பேரறிஞர் அண்ணாதுரை அவர்களின் 115 வது பிறந்த தினத்தை கொண்டாடும் விதமாக மானாமதுரை சட்டமன்றத் தொகுதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக பொதுக்கூட்டம் மற்றும் அதிமுக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு விளக்க உரையின் பொதுக்கூட்டமும் மானாமதுரை நகர் கழக செயலாளர் திரு வி. ஜி. போஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இப்பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களான கழக செய்தி தொடர்பாளர் திருமதி எ. எஸ். மகேஸ்வரி, தலைமை கழக பேச்சாளர் திரு பி. சின்னதம்பி, மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் திரு பி. ஆர். செந்தில்நாதன், முன்னாள் கதர் மற்றும் கிராம தொழில் மற்றும் வாரியத்துறை அமைச்சர் திரு வி. ஜி. பாஸ்கரன் அவர்களும் சிறப்புரை ஆற்றி முன்னிலை வகித்தனர். மேலும் இந்நிகழ்வில் சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள், மானாமதுரை நகர் கழக, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
- செய்தியாளர் லிவிங்ஸ்டன்
No comments:
Post a Comment