சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் மற்றும் இளையான்குடி வட்டத்திற்குட்பட்ட கண்மாய்களில், நீர்வளத்துறையின் சார்பில் பழுதுபார்த்தல், புனரமைத்தல் மற்றும் மறுசீரமைத்தல் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
காளையார்கோவில் வட்டம், உசிலங்குளம் கிராமத்தில் உசிலங்குளம் கண்மாயானது பழுதுபார்த்தல், புனரமைத்தல் மற்றும் மறுசீரமைத்தல் திட்டம் - தொகுதி -7-ன் கீழ் 90.00 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியின் மூலம் 111.25 ஹெக்டேர் பாசன வசதி பெறுகின்றது. மேலும், இத்திட்டத்தின் மூலம் கண்மாய் கரையான 2690மீட்டர் நீள அளவிற்கு பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. 3 மடைகள் மறுகட்டுமான பணிகள் நிறைவடைந்து வெளிநீர் போக்கி பழுது பார்க்கும் பணி நடைபெற இருக்கிறது. மூன்று மடைகளின் கீழ் 111மீட்டர் நீள அளவில் சிமிண்ட் கலவையிலான பாசன வாய்க்கால் அமைக்கும் பணி மற்றும நிலத்தடிநீர் செறிவூட்டி அமைக்கும் பணி; நிறைவு பெற்றுள்ளது.
கண்மாய் நிலஅளவை செய்யும் பணி நிறைவடைந்து, எல்லைக்கற்கள் ஊன்றும் பணி நடைபெற இருக்கிறது. மேற்கண்ட பணிகள் தொடர்பாக இன்றைய தினம் மாவட்ட ஆட்சித்தலைவர், களஆய்வுகள் மேற்கொண்டார். அதேபோன்று, காளையார்கோவில் மற்றும் இளையான்குடி வட்டங்களில் உள்ள 17 கண்மாய்களை பழுதுபார்த்தல், புனரமைத்தல் மற்றும் மறுசீரமைத்தல் திட்டத்தில் - தொகுதி -6-ன் கீழ் ரூ.1052.76 இலட்சங்களுக்கு புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அத்தொகுப்பில் உள்ள 17 கண்மாய்களில் காளையார்கோவில் வட்டத்தில் தவசிகுடி கிராமத்தில் தவசிகுடி கண்மாயும் ஒன்றாகும், இக்கண்மாயானது ரூ.45.41 இலட்சம் மதிப்பீட்டிற்கு புனரமைக்கும் பணி நடைபெற்றுள்ளது. இக்கண்மாயின் பாசன பரப்பு51.81 ஹெக்டேர் ஆகும். இக்கண்மாயின் நீர்பிடிபகுதி 46.86 ஹெக்டேர் ஆகும். இத்திட்டத்தின் மூலம் விவசாயம் செய்யப்படாமல் விடப்பட்ட ஆயக்கட்டு பகுதிகள் முழுமையாக பாசன வசதி பெறுகின்றது.
மேலும், இத்திட்டத்தின் மூலம் 1676 மீட்டர் நீளத்திற்கு கண்மாய் கரை பலப்படுத்தப்பட்டுள்ளது. 2 மடைகள் மறுகட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளது. 42மீட்டர் நீளத்திற்கு 2 மடைகளின் கீழ் சிமிண்ட் கலவையிலான பாசன வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. நிலத்தடிநீர் செறிவூட்டி ஒன்று கலுங்கின் அருகே அமைக்கப்பட்டுள்ளது. கண்மாயை முழுமையாக நிலஅளவை செயது எல்கை கற்கள் ஊன்றப்பட்டுள்ளது. மேற்கண்ட பணிகள் தொடர்பாக இன்றைய தினம் மாவட்ட ஆட்சித்தலைவர், களஆய்வுகள் மேற்கொண்டார்.
இந்த ஆய்வுகளின் போது, சருகனியாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் அ.வெ.பாரதிதாசன், உதவி செயற் பொறியாளர் சாந்திதேவி, உதவி செயற்பொறியாளர்கள் முத்துராமலிங்கம், அமுதசுரபி, கண்ணன், சம்பத்குமார் மற்றும் ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தா கருப்பசாமி, விவசாய சங்கத்தலைவர் காந்தி, விவசாய சங்க உறுப்பினர் தெட்சினாமூர்த்தி உட்பட பலர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment