சிவகங்கை நகராட்சி வார்டு எண் 04, பழைய நீதிமன்ற வாசல் அருகில், "இராமசந்திரனார் நினைவு பூங்காவை" கூட்டுறவு துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன், முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி. ஆ. தமிழரசி ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தார்கள்.
அதேபோல் சிவகங்கை நகராட்சி வார்டு எண் 21, பேருந்து நிலையம் எதிர்புறம், "கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்" கீழ், செக்கடி ஊரணி மேம்பாடு செய்தல் பணியினையும் மாண்புமிகு அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் சிவகங்கை நகராட்சி தலைவர், துணை தலைவர், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், திமுக மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment