சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் மக்களின் ஏறத்தாழ 30 ஆண்டு கோரிக்கையான வீட்டுமனை பட்டாக்களை பொது மக்களுக்கு மாண்புமிகு முன்னாள் அமைச்சரும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ. தமிழரசிரவிக்குமார் அவர்கள் வழங்கினார்கள். வட்டாட்சியர் திரு கோபி மற்றும் மண்டல துணை வட்டாட்சியர் திருமதி பிரின்சி முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் நகர செயலாளர் திரு பொன்னுச்சாமி அவர்களும், ஒன்றிய செயலாளர் திரு ராஜாமணி அவர்களும், தேர்தல் துணை வட்டாட்சியர் திருமதி புஷ்ப லீலா, மாவட்ட பிரதிநிதி திரு காளியப்பன், மாங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் திரு முருகவள்ளி தேசிங்கு ராஜா, இடைக்காட்டூர் திரு செல்வம், வார்டு செயலாளர் திரு மூர்த்தி, Ex.கவுன்சிலர் திரு கணேசன், கட்சி நிர்வாகிகள் திரு சசி பிரசாத், திரு சிவா, திரு செங்கிஸ்கான், கழக நகர் ஒன்றிய நிர்வாகிகளும் மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் லிவிங்ஸ்டன்
No comments:
Post a Comment