மேலும் மாவட்ட வழக்கறிஞர் பாசறை இணை செயலாளர் திரு ஆவரங்காடு கார்த்திக் ராஜா மற்றும் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் திரு சாட்டை சரவணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முன்னதாக கட்சியின் ஒவ்வொரு நிர்வாகிகளும் தாமாக முன்வந்து நீண்ட நேரம் உரையாற்றி வீர முழக்கமிட்டு அமர்ந்தனர்.
இதில் பேசிய மாநில கொள்கை பரப்புச் செயலாளர், ஆளும் திமுக அரசின் மெத்தன போக்கால் மக்கள் அவல நிலையை சந்திக்கின்றனர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஒவ்வொரு செயல்பாடுகளும் கேளி கூத்தாக அரங்கேறிக் கொண்டிருக்கிறது என்றும் ஊழல் கமிஷன் மலிந்த அரசாக தமிழக அரசு செயல்பட்டுக் கொண்டுள்ளது பற்றி விரிவாக விவரித்தார். தமிழக அரசு சரியான நிர்வாகத் திறமை இல்லாததால் மாநிலத்தின் கடன் சுமை அதிகரித்து வருகிறது, தமிழக மக்களுக்கு எந்த ஒரு நல்ல திட்டங்களும் முழுமையாக சென்று சேர்வதும் இல்லை செயல்படுத்துவது இல்லை, மானாமதுரை சட்டமன்ற தொகுதியை பொருத்தவரை சட்டமன்ற உறுப்பினர் எந்த ஒரு வளர்ச்சி திட்டங்களையும் மக்களுக்காக முன்னெடுப்பதில்லை என்றும் குற்றம் சாட்டினார்.


ஓட்டுக்கு பணம் கொடுப்பதோடு கட்சிகளின் கடமை முடிந்து விட்டது அதேபோல் ஓட்டிற்காக பணம் பெறுவதோடு மக்களின் பிரச்சனைகள் தீர்ந்து விடாது ஒரு நல்ல தலைவர்களை தேர்ந்தெடுப்பதில் மக்கள் தவறு செய்கின்றனர் என்றும் சாடினார். எந்தவொரு கட்சிக்கும் நாம் தமிழர் கட்சி போன்ற கொள்கைகள் கிடையாது, கொள்கைகள் என்னவென்றே தெரியாத நிலையில் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் தமிழ்நாட்டில் உள்ளனர், ஆயிரக்கணக்கான போராட்டங்களை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் முன்னெடுத்தது போல் ஒரு மக்கள் தலைவனை கைகாட்ட எவராலும் முடியாது என்றும் தெரிவித்தார். மதுவால் சூழ்ந்துள்ள தமிழ்நாடு இதே போல் தொடர்ந்தால் சுடுகாடு ஆகிவிடக்கூடும் என்று எச்சரித்தார். மத்திய பாஜக அரசின் தவறான கொள்கை முடிவுகளால் சிலிண்டர் விலையேற்றம், பெட்ரோல் டீசல் விலையேற்றம் அடித்தட்டு மக்களை சூறையாடிக் கொண்டுள்ளது. மேலும் மக்களின் பலதரப்பட்ட பிரச்சனைகள் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக பலரும் பேசினார்கள்.
இந்நிகழ்வில் மானாமதுரை நாம் தமிழர் கட்சியின் ஒன்றிய மற்றும் நகர நிர்வாகிகள் அனைவரும் பெருமளவில் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் லிவிங்ஸ்டன்
No comments:
Post a Comment