சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதிக்குட்பட்ட திருப்புவனம் ஒன்றியம் ஏனாதி கிராமத்தில் தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சார்பில் புதிய நெல் கொள்முதல் நிலையத்தினை மாண்புமிகு முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ. தமிழரசிரவிக்குமார் அவர்கள் திறந்து வைத்தார்கள்.


இந்நிகழ்வில் மண்டல மேலாளர் திரு அருண், நுகர் பொருள் வாணிப கழகத்தின் துறை அதிகாரிகள், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் திரு சேங்கைமாறன் அவர்களும், திருப்புவனம் ஒன்றிய துணை பெருந்தலைவர் திரு அழ. மூர்த்தி அவர்களும், கிழக்கு ஒன்றிய செயலாளர் MA. கடம்பசாமி அவர்களும், ஏனாதி தேளி ஊராட்சி மன்ற தலைவர் திரு த. நீலமேகம், மாவட்ட பிரதிநிதி திரு வ. ராமலிங்கம், ஒன்றிய கவுன்சிலர்கள் திரு ஈஸ்வரன், திரு சுப்பையா, திரு TR. சேகர், விவசாய பெருமக்கள் மற்றும் கழக முன்னோடிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- செய்தியாளர் லிவிங்ஸ்டன்
No comments:
Post a Comment