சிவகங்கை மாவட்டத்தில், ஆட்சியர் தலைமையில் வாக்கு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 4 July 2023

சிவகங்கை மாவட்டத்தில், ஆட்சியர் தலைமையில் வாக்கு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி.


மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்கு சரிபார்க்கும் இயந்திரங்கள் ஆகியவைகளின் முதல்நிலை சரிபார்ப்பு பணியினை, மாவட்ட ஆட்சித்தலைவர்  ஆஷா அஜித், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில்,  துவக்கி வைத்தார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பறையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்கு சரிபார்க்கும் இயந்திரங்கள் ஆகியவைகளின் முதல்நிலை சரிபார்ப்பு பணியினை, மாவட்ட ஆட்சித்தலைவர்  ஆஷா அஜித், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில்,  துவக்கி வைத்து தெரிவிக்கையில், இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, சிவகங்கை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட மின்னணு வாக்கு சரிபார்க்கும் இயந்திரங்கள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வரப்பெற்றுள்ளன. 


இந்த இயந்திரங்களில் முதல்நிலை சரிபார்க்கும் பணிகள்  அங்கீகரிக்கப்பட்ட அனைத்து    தேசியஃமாநில அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதில்,  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்  பாதுகாப்பு பெட்டக அறையில் உள்ள 2670 பேலட் யூனிட்,  1936 கன்ட்ரோல் யூனிட்,  2088 வி.வி.பேட் உட்பட  இயந்திரங்களில் முதல் நிலை சரிபார்க்கும் பணியினை, பெல் நிறுவன தொழில்நுட்ப பொறியாளர்கள் மேற்கொள்கின்றனர். இப்பணியானது, வருகின்ற 10.08.2023-க்குள் மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், மேற்கண்ட பணியானது இன்றைய தினம் (04.07.2023) தொடங்கப்பட்டுள்ளது என, மாவட்ட ஆட்சித்தலைவர்  ஆஷா அஜித் தெரிவித்தார்.


இந்நிகழ்வின் போது, வருவாய் கோட்டாட்சியர்கள்  கு.சுகிதா (சிவகங்கை), சோ.பால்துரை (தேவகோட்டை), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) க.புஷ்பா தேவி மற்றும் தேர்தல் வட்டாட்சியர் இரா.மாணிக்கவாசகம், சிவகங்கை வட்டாட்சியர் பாலகுரு மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள், பெல் நிறுவன தொழில்நுட்ப பொறியாளர்கள் உட்பட பலர்  உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad