

திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு மக்களின் அன்றாட பணப்பரிமாற்ற தேவை பூர்த்தி செய்யும் வகையில் கூட்டுறவு வங்கி கிளை தங்களின் ஏடிஎம் மையத்தை நிறுவுகிறது. ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மானாமதுரை தொகுதியில் உள்ள திருப்புவனத்தில் மக்கள் தொகை அதிகமாகும் சூழலில் திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகளை துரிதப்படுத்தவும், திட்டங்களை முழுமையாக நிறைவேற்ற போதுமான நிதி ஒதுக்கீடு செய்யவும் தன் தொகுதிக்குட்பட்ட திருப்புவனம் மக்களை கருத்தில் கொண்டு வேண்டுகோள் விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் கூட்டுறவுத் துறை அதிகாரிகளும், பேரூராட்சி தலைவர் திரு சேங்கைமாறன் அவர்களும், நகரக் கழகச் செயலாளர் திரு நாகூர்கனி அவர்களும், ஒன்றிய கழக செயலாளர் திரு கடம்பசாமி அவர்களும், கழக முன்னோடிகள் மற்றும் உடன்பிறப்புகள் கலந்துகொண்டனர்.
- செய்தியாளர் ஜே. கே. லிவிங்ஸ்டன்
No comments:
Post a Comment